வள்ளுவர் வழியில்…

     நவில்தொறும் நயம்தரும் நூல்! நுண்ணிய நூல்! மெய்ப்பொருள் காட்டும் நூல்! அற்றம் காக்கும் நூல்! அறிதோறும் அறியாமை காட்டும் நூல்! தொட்டனைத் தூறும் மணற்கேணி போன்ற நூல்!  வருமுன்னர் காக்கும் நூல்! மெய்வருத்தக் கூலிதரும் நூல்! நுண்மாண் நுழைபுலம் தரும் நூல்! புகழொடு தோன்றிய நூல்! தனக்குவமை இல்லாத நூல்! கேட்டார்ப் பிணிக்கும் நூல்! நா நலம் தரும் நூல்! இடுக்கண் களையும் நூல்! என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட நூல் திருக்குறள். இந்நூலுக்கு எத்தனை உரைகள் வந்தாலும், எத்தனை மாநாடுகள் நடத்தினாலும் இதன் உட்பொருளை முழுமையாக யாரும் புரிந்துகொள்ள இயலாது. அதனால் தான் காலந்தோறும் இந்நூலுக்கு புதிய புதிய உரைகள் எழுதப்பட்டு வருகின்றன. உரைகளின் வரிசையில் இவ்வுரை, சமகால மொழிநடையில், திருக்குறள் ஒரு வாழ்வியல் வழிகாட்டி நூல் என்பதை உணர்த்தும் நோக்குடன் எழுதப்பட்டுள்ளது, பல்வேறு மொழிகளிலும் வழங்கப்பட்டுவரும் உலக அறிஞர்களின் பொன்மொழிகளுக்கு இணையான சிந்தனைவளமுடையது திருக்குறள் என்பதை அழகுபட மொழிகிறது.நூல் விலை - ரூபாய் 100

மின்னஞ்சல் - verkalaithedipublication@gmail.com 

அலைபேசி - 9524439008


அமேசான் கிண்டிலில் இலவசமாக வாசிக்க  

திருக்குறள் பொன்மொழிகள் மின்னூல்

Post a Comment

Previous Post Next Post