கவிஞர் இரா.ரகு அவர்களின் நிழலின் தேடல் என்ற இக்கதை நூல் அவரது சமூகத் தேடலுக்கும், புரட்சியான சிந்தனைகளுக்கும் தக்க சான்றாக அமைகிறது. பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்காரியம் என பல்வேறு சிந்தனைகளின் தாக்கங்களை இக்கதையில் காணமுடிகிறது. கதையின் கரு, பாத்திர வடிவமைப்பு, கதைசொல்லும் முறை, உத்திகள் என பல்வேறு நிலைகளிலும் முதிர்ச்சி தெரிகிறது. காதல், சாதி, ஆணவக் கொலை என காலகாலமாக மனிதர்களிடமிருந்து நீங்காத சூழல்களையே இக்கதை பேசினாலும், இளைய தலைமுறையிடையே மனதளவில் மாற்றம் வந்துவிட்டது என்பதை உணர்த்துகிறது. இன்னும் மாறாத மனிதர்களின்  அறியாமையை எள்ளி நகையாடுகிறது. இக்கதையில் ராசு மக்களிடம் பேசும் ஒரு காட்சியில் கதாசிரியர் தாம் சொல்ல விரும்பிய புரட்சிகரமாக சிந்தனைகளை கதையேடு இயைபுபடுத்திச் சொல்லியவிதம் மிக நன்று. பாரதிதாசனின் புரட்சிக்கவியில் உதாரன் பேசிய காட்சி என் கண்முன் வந்து சென்றது. கவிஞரான இரா.ரகு இனி கதாசிரியர் என்ற இலக்கிய வடிவத்தாலும் புகழ்பெறட்டும் என அன்புடன் வாழ்த்துகிறேன்.

நூல் விலை - ரூபாய் 100

மின்னஞ்சல் - verkalaithedipublication@gmail.com 


அலைபேசி - 9524439008

Post a Comment

Previous Post Next Post