FRUIT OF RAPTURE என்ற சொல்லுக்குத் தமிழில் அறுவடைக்குப் பயன் என்ற பொருள் வருகிறது. நல்லதொரு தலைப்பு, ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக ஒவ்வொரு கவிதைகளும் அமைகின்றன. வாழ்க்கை குறித்த பல்வேறு தேடல்களையும் அனுபவத்தையும் கவிஞர் முன்வைக்கிறார். வாழ்க்கை பற்றிய இவரது கவிதைகளில், RESPECT TO LIFE என்ற தலைப்பில் அமைந்த         
Enjoy the journey of life
Till the death calls;
Say thanks to life
With your smile;
At the end of journey.
என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. கவிஞர் மேகா அவர்களுக்கு கவிதை உலகில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. இவரது கவிதைகள் அழகான பொன்மொழிகள் போல உள்ளன. அதனால் இந்த நூலை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட்டால் தமிழுலகம் இக்கவிதைகளை வரவேற்கும். கவிதாயினி மேகா ரவி அவர்கள் படைப்புலகில் என்றும் நிலைத்திருக்க எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.                


நூல் விலை - ரூபாய் 80

மின்னஞ்சல் - verkalaithedipublication@gmail.com 


அலைபேசி - 9524439008

Post a Comment

Previous Post Next Post